காலையில் நல்ல மனநிலையில் எழுவது எப்படி?

✫ காலையில் எழும்போது அனைவரும் நல்ல மனநிலையில் இருக்கவேண்டும் என நினைப்பர். ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமாகாத விஷயமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் முந்தைய நாளின் செயல்களே ஆகும்.
✫ முந்தைய நாளின் பல்வேறு காரணங்களால் தாமதமான தூக்கம் தாமதமாக எழ வைப்பது என்பது ஒரு முக்கிய காரணம் ஆகும். நல்ல தூக்கம் நல்ல மனநிலையில் நம்மை எழ வைக்கும். எனவே காலையில் எழுந்ததும், நன்கு புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் இருப்பதற்கு சில வழிகளை பின்பற்றினால் போதும். நல்ல மனநிலையில் எழுவதற்கான சிறந்த வழிகள் :

✫ ஒருவர் சரியான நேரத்திற்கு தூங்கச் சென்று, போதுமான தூக்கம் இருந்தால் மட்டுமே, அவர்கள் காலையில் களிப்புடன் நல்ல மனநிலையில் எழ முடியும்.

✫ இரவில் நல்ல தூக்கத்தைப் பெற, தூங்கும் அறை போதுமான இருட்டுடன் இருக்கிறதா என்பதை உறுதி செய்யவும். இல்லையெனில் சிறிய அளவிலான ஒளி மனதை விழிப்படையச் செய்யும்.

✫ தூங்கும் நேரத்தில் மன அழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய விஷயம், தொலைக்காட்சி செய்திகள் மற்றும் எதிர்மறையான செய்திகள் ஒரு நல்ல இரவு ஓய்விற்கு உகந்ததல்ல.

✫ மறுநாள் காலை நேரத்தில் எந்த செயலையும் அவசரமாக செய்யாமல் இருக்க, அது சம்மந்தபட்ட வேலைகளை இரவு தூங்க செல்லும்முன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

✫ தூங்க செல்வதற்கு முன்பு நன்றியுரையை அல்லது சில குறிப்புகளை எழுத சில நிமிடங்களை எடுத்துக் கொள்ளவும். பகலில் எதனுடைய பிரதிபலிப்பு மகிழ்ச்சியடையச் செய்ததோ அல்லது நல்லதாக உணர வைத்ததோ, அது தான் மனதை நன்றியுள்ள மற்றும் மகிழ்ச்சியான மனநிலைக்கு கூட்டிச் செல்ல உதவும்.

குறிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் : ✫ இரவில் நன்றாக தூங்குவதற்கு வழக்கமாக தூங்கும் நேரத்தை கடைபிடிக்க வேண்டும்.
✫ தூங்க செல்லும் முன் புகைப்பிடிப்பதையும், காபி அருந்துவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
✫ படுக்கை செல்வதற்கு முன், சற்று நேரத்திற்கு முன்பே வீட்டை அமைதிப்படுத்தி, பிரகாசமான விளக்குகள், தொலைக்காட்சி பெட்டியை மற்றும் உங்களுடைய கைபேசிகள் போன்றவற்றை அணைத்து வைக்கவும்.
✫ இது போன்ற செயல்களை தினந்தோறும் கடைபிடிப்பதன் மூலம் அனைவரும் நல்ல முறையில் தூங்குவது மட்டுமின்றி, காலையில் எழும்போது எந்தவிதமான பதட்டம், பரபரப்புமின்றி எழுந்து தங்களுடைய வேலை துரிதமான முறையில் செய்து அன்றைய நாளை வெற்றியுடன் நடைபோட வழிவகுக்கும்.

Comments

Popular posts from this blog

எதிரிகளை அழிக்கும் ஆதித்ய ஹிருதயம்

27 நட்சத்திரத்தின் குறிப்புகள்

ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை!...