விடிய விடிய விரதம்! சிவ தரிசனம்

�� ஆதியும் இல்லாத, அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதியனாய், பிரம்மாண்டமாக லிங்க வடிவெடுத்து வெளிப்பட்ட நாளே மகாசிவராத்திரி. மாசி மாதம், கிருஷ்ணபட்சத்தில் வரும் அற்புதமான நாள் இது. மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிவனுக்கு விடிய, விடிய அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாசி மாத தேய்பிறையில் சதுர்த்தியன்று மகாசிவராத்திரி வருகிறது.

�� முறைப்படி விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் சகல வளங்களையும் பெற்று வாழ்வில் மகிழ்ச்சியாக வளமாக வாழ முடியும். இந்த நாளில்...

�� மகாசிவராத்திரி எனும் புண்ணியம் நிறைந்த நன்னாளில், இரவில் நான்கு ஜாம பூஜைகள் நடைபெறும். அப்போது சிவலிங்கமானது குளிரக் குளிர வில்வங்களாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்படும். அவரின் மனம் குளிரக் குளிர ருத்ர ஜப பாராயணம், தேவாரப் பதிகங்கள் ஆகியவை பாடப்படும். சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படும்!

�� இந்த நாளில் விரதம் இருந்து, விடிய விடிய கண் விழித்து, நான்கு கால பூஜையையும் தரிசிப்பவருக்கு முக்தி தரவேண்டும் என பார்வதி தேவி ஈசனிடம் கேட்க, அப்படியே ஆகட்டும் என வரம் தந்தருளினார் ஈசன். எனவே, மற்ற நாளைவிட, மகாசிவராத்திரி நாளில் செய்யப்படும் பூஜை பன்மடங்கு பலனைத் தந்தருளும் என்பது ஐதீகம்!

�� திரியோதசி முன் இரவு வரை இருக்க, நடு இரவில் சதுர்த்தி வந்தால் அது மிக விசேஷம். அது உத்தம சிவராத்திரி என அழைக்கப்படுகிறது. சூரிய உதயம் முதல் மறுநாள் வரை சதுர்த்தசி இருப்பது மத்ய சிவராத்திரி.

�� முதல் நாள் இரவில் நிசி நேரத்தில் சதுர்த்தசி நேராமல் மறுநாள் இரவு நிசி நேரத்தில் சதுர்த்தசியும், அமாவாசையும் சந்திப்பது அதம சிவராத்திரி. சோமவாரத்தில் வரும் சிவராத்திரி விரதத்திற்கு மூன்று கோடி சிவராத்திரி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.

�� சிவராத்திரியில் சிவ தரிசனத்தைக் காண புண்ணியம் செய்திருக்க வேண்டும். குறிப்பாக, விரதம் மேற்கொண்டு சிவனாரைத் தரிசிப்பது இன்னும் பலன்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

�� சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், அதிகாலையில் எழுந்து நித்தியக் கடன்களை முடித்து, நீராடி, சிவாலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும். சிவபுராணம் பாராயணம் செய்து எதுவும் சாப்பிடாமல் விரதம் மேற்கொள்ளவேண்டும். இரவில் தூங்காமல் சிவ நாமம் கூறி, சிவ கதைகளைக் கேட்டு நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்தால், சிவனருள் கிடைக்கப் பெறலாம்.

�� சிவராத்திரி தின பூஜையைக் கண்ட அசுரக் கூட்டம் தங்களையும் அறியாமல், 'சிவ சிவ" என்று கூறினார்களாம். இதனால் அவர்கள் பாவங்கள் நீங்கியது. அவர்களுக்கு சாப விமோசனம் அளித்தார் ஈசன், என்கிறது புராணம்!

�� இத்தனை மகிமைகள் கொண்ட சிவராத்திரி விரதத்தை, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு, ஆதிசேஷன், ஸ்ரீசரஸ்வதி முதலான கடவுளரும் மேற்கொண்டனர். சிவ தரிசனம் செய்து சிவனருளைப் பெற்றனர்!

Comments

Popular posts from this blog

எதிரிகளை அழிக்கும் ஆதித்ய ஹிருதயம்

27 நட்சத்திரத்தின் குறிப்புகள்

ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை!...