அருள்மிகு திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்
�� சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரில் ஒருவர் பிரம்மா. பூவுலக வாசிகளின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மா. பிரம்மாவுக்கு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே கோவில்கள் உள்ளன. அவற்றில் சிறப்பானது திருச்சி மாவட்டம் சிறுகனு}ரை அடுத்த திருப்பட்டூரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோவிலாகும்.
கோவில் வரலாறு :
�� பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார். அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய் எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார். படைப்புத்தொழிலும் பறி போனது.
�� நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார். அதற்கு சிவன் பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் துவாதசலிங்க வடிவில் இருக்கும் என்னை வணங்கினால், சாப விமோசனம் பெறுவாய் என்றார். மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும் அவ்வாறு செய்து சாபம் நீங்கப் பெற்றார். என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக என வரமும் கொடுத்தார். பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது.
கோவில் அமைப்பு :
�� இவ்வாலயம் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பளவில் கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடனும், இரண்டு பிரகாரங்களும் கொண்டு அமைந்துள்ளது.
�� கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்து வேத மண்டபம், நாத மண்டபம் ஆகியவை கடந்ததும் வரும் அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள கருவறையில் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக இங்கு அருள்பாலிக்கிறார். பிரகார வலம் வரும் போது, சிவன் சன்னிதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி, அடுத்து அருகில் தனிசன்னிதியில் பிரம்மா, அடுத்து சிவன் சன்னிதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் என வரிசையாகத் தரிசிக்கலாம்.
�� பிரம்மன் வழிபட்ட துவாதசலிங்க தனி மண்டபத்தில் உள்ளது. பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி பிரகாரத்தின் தெற்குப் பகுதியில் உள்ளது. இத்தலத்திலுள்ள காலபைரவர் மக்களுக்கு நோய் தீர்க்கும் வைத்தியரைப் போல உதவுகிறார். அம்பாள் பிரம்மநாயகியின் சன்னிதி சுவாமி சன்னிதிக்கு இடதுபுறம் தனிக்கோவிலாக அமைந்துள்ளது. அம்பாள் கோவில் அடுத்துள்ள வடக்குப் பிரகாரத்தில் கைலாசநாதர் கோவில் கல்தேர் வடிவில் அமைந்துள்ளது.
பரிகாரம் : �� குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது.
�� மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.
�� திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்தி போன்ற வேண்டுதலுக்கு சிறந்த தலமாகும்.
�� இத்தலத்தில் மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரர்த்தனை தலமாக விளங்குகிறது.
Comments
Post a Comment