வெற்றி என்பது பொது வழியல்ல. அது எப்போதும் தனி வழியாகத்தான் இருந்து வருகிறது. அதனால்தான் அன்றாட வாழ்வில் வெல்பவர் சிலராகவும், வீழ்பவர் பலராகவும் இருந்து வருகிறார்கள். வெற்றிக்கான நேர்வழி என்பது உழைப்பு தான் என்பது உலகளாவிய விதியாகும். ஆனால், உழைப்பவர்கள் அனைவரும் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்ல முடிவதில்லை. உலகில் உள்ள அனைவரும், ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த வகையில் ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பார்ப்பது அல்லது பயன்படுத்துவது என்ற நிலையில் அவரது முயற்சிகளில் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன என்று முன்னோர்கள் கண்டறிந்துள்ளார்கள். சற்றே புதியதாகவும், நூதன விஷயமாகவும் உள்ள அவற்றை பற்றிய தகவல்களை இங்கே காணலாம். நட்சத்திர குறியீடுகள்: 1. அஸ்வினி நட்சத்திரத்துக்கு குதிரைத் தலை அல்லது குதிரை உருவம். 2. பரணிக்கு மண் பாத்திரம், அடுப்பு அல்லது முக்கோண வடிவம் 3. கிருத்திகை நட்சத்திரத்துக்கு கத்தி, வாள் மற்றும் ஹோம தீ...