வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள்.....

வெற்றி என்பது பொது வழியல்ல. அது எப்போதும் தனி வழியாகத்தான் இருந்து வருகிறது. அதனால்தான் அன்றாட வாழ்வில் வெல்பவர் சிலராகவும், வீழ்பவர் பலராகவும் இருந்து வருகிறார்கள். வெற்றிக்கான நேர்வழி என்பது உழைப்பு தான் என்பது உலகளாவிய விதியாகும். ஆனால், உழைப்பவர்கள் அனைவரும் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்ல முடிவதில்லை.     
உலகில் உள்ள அனைவரும், ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த வகையில் ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பார்ப்பது அல்லது பயன்படுத்துவது என்ற நிலையில் அவரது முயற்சிகளில் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன என்று முன்னோர்கள் கண்டறிந்துள்ளார்கள். சற்றே புதியதாகவும், நூதன வி‌ஷயமாகவும் உள்ள அவற்றை பற்றிய தகவல்களை இங்கே காணலாம். 
நட்சத்திர குறியீடுகள்:
1.    அஸ்வினி நட்சத்திரத்துக்கு குதிரைத் தலை அல்லது குதிரை உருவம்.
2.    பரணிக்கு மண் பாத்திரம், அடுப்பு அல்லது முக்கோண வடிவம்
3.    கிருத்திகை நட்சத்திரத்துக்கு கத்தி, வாள் மற்றும் ஹோம தீ ஜூவாலை
4.    ரோகிணிக்கு தேர், வண்டி, கோவில், ஆலமரம் மற்றும் சக்கரம்
5.    மிருகசீரி‌ஷம் நட்சத்திரத்துக்கு மான் தலை மற்றும் தேங்காயின் கண்
6.    திருவாதிரை நட்சத்திரத்துக்கான குறியீடு மனித தலை, வைரம் மற்றும் நீர்த்துளி
7.    புனர்பூசம் நட்சத்திர சின்னம் வில் மற்றும் அம்புக்கூடு
8.    பூசம் நட்சத்திரத்துக்கு தாமரை, புடலம் பூ, அம்பு மற்றும் பசுவின் மடி
9.    ஆயில்யத்துக்கு சர்ப்பம் மற்றும் அம்மி ஆகியவை.
10.    மகம் நட்சத்திரத்துக்கு வீடு, பல்லக்கு மற்றும் நுகம்
11.    பூரம் நட்சத்திரத்துக்கு கட்டிலின் இரு கால்கள், சங்கு   மற்றும் மெத்தை
12.    உத்திரம் நட்சத்திர குறியீடுகள் கட்டில் கால்கள் மற்றும் மெத்தை
13.    ஹஸ்தம் நட்சத்திரத்துக்கு கைகள் அல்லது உள்ளங்கை
14.    சித்திரைக்கு முத்து மற்றும் ஒளி பொருந்திய ரத்தினக் கற்கள்.
15.    சுவாதிக்கு புல்லின் நுனி மற்றும் காற்றில் அசையும் தீபச்சுடர்
16.    விசாகத்துக்கு முறம், தோரணம் மற்றும் பானை செய்யும் சக்கரம்
17.    அனு‌ஷம் நட்சத்திரத்துக்கு குடை, மலரும் தாமரை மற்றும் வில் வளைவு
18.    கேட்டைக்கு குடை, குண்டலம் மற்றும் ஈட்டி
19.    மூலம் நட்சத்திரத்துக்கு அங்குசம், சிங்கத்தின் வால் மற்றும் யானை தும்பிக்கை
20.    பூராடம் நட்சத்திரத்துக்கு விசிறி, முறம் மற்றும் கட்டில் கால்கள்
21.    உத்திராடம் நட்சத்திரத்துக்கு யானை தந்தம், மெத்தை விரிப்பு, கட்டில் கால்கள்
22.    திருவோணத்துக்கு காது, மூன்று பாதச்சுவடுகள் மற்றும் அம்பு
23.    அவிட்டம் நட்சத்திரத்துக்கு மிருதங்கம் மற்றும் உடுக்கை
24.    சதயத்துக்கு பூங்கொத்து மற்றும் வட்ட வடிவம்
25.    பூரட்டாதிக்கு கட்டிலின் இரு கால்கள், வாள் மற்றும் இரு மனித முகங்கள்
26.    உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கு கட்டில் கால்கள் மற்றும் இரட்டையர்கள்
27.    ரேவதி நட்சத்திரத்தின் சின்னங்கள் மீன் மற்றும் மத்தளம்

ABOUT SSL CERTIFICATES

Comments

Popular posts from this blog

எதிரிகளை அழிக்கும் ஆதித்ய ஹிருதயம்

27 நட்சத்திரத்தின் குறிப்புகள்

ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை!...