ஏழரைச்சனியில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை!

'சனீஸ்வரனைப் போல் கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை" என்பதும் ஜோதிடப் பழமொழி.

ஒருவரின் சந்திர ராசிக்கு, முன் ராசியிலும், சந்திர ராசியிலும், அதற்கு அடுத்த ராசியிலும் சனீஸவரன் சஞ்சாரம் செய்யும் காலமே ஏழரைச் சனியாகும்!

✧ அந்த மூன்று வீடுகளில் தலா இரண்டரை வருடங்கள் வீதம் மொத்தம் ஏழரை ஆண்டுகள் அவர் வந்து (அழைக்காத) விருந்தாளியாகத் தங்கிவிட்டுப் போகும் கால கட்டமே ஏழரைச் சனியாகும்.

ஏழரைச்சனியில் நன்மை தருவன :

✧ வாடகை வீட்டுக்கு குடிமாறாலாம்.

✧ வெளியூர் வேலைக்கு செல்லலாம்.

✧ பழைய கடன்களை அடைக்கலாம்.

✧ மகப்பேறு செய்து கொள்ளலாம்.

✧ இடமாற்றங்கள் போன்றவைகளைச் செய்யலாம்.

✧ உயில்கள் எழுதி வைக்கலாம்.

✧ தான தர்ம செட்டில்மென்ட் செய்யலாம்.

✧ பழைய கோவில்களை திருத்திக் கட்டலாம்.

✧ குலதெய்வ வழிபாடுகள் செய்யலாம்.

✧ சீமந்தம் வளைகாப்பு செய்யலாம்.

✧ சுபவிரயங்களுக்காக செலவிடலாம்.

✧ பழைய கட்டிடங்கள் வேலை செய்யலாம்.

✧ பழைய பொருட்களை விற்கலாம்.

✧ புனித யாத்திரைகள் நன்கு செய்யலாம்.

✧ நல்ல விரதங்களை கடைப்பிடிக்கலாம்.

✧ தியானம் யோகா பயிற்சி செய்யலாம்.

✧ அன்னம் வஸ்திரம் தானங்கள் செய்யலாம்.

✧ வேறு வேலைக்கு செல்லலாம்.

✧ அலுவலக இடமாற்றம் நல்லதாகும்.

✧ குருகுலத்தில் இணைந்து பணியாற்றலாம்.

✧ எளிமையான வாழ்க்கையை நடத்தலாம்.

✧ பலன் கருதாது பணிவுடன் பணியாற்றலாம்.

ஏழரைச்சனியில் கூடாதவை :

✧ புதிய முதலீடுகள் செய்யக்கூடாது.

✧ புதிய நட்புறவுகள் ஏற்படக்கூடாது.

✧ புதிய மனைபுகுதல் போன்றவை கூடாது.

✧ திருமணங்கள் செய்யக்கூடாது.

✧ தொழில் நிறுவனங்கள் ஆரம்பிக்க கூடாது.

✧ தொழிலில் கூட்டு சேர்க்க கூடாது.

✧ அஸ்திவாரங்கள் போடக்கூடாது.

✧ பெயர் மாற்றங்கள் செய்யக்கூடாது.

✧ கல்வியில் மாற்றங்கள் செய்யக்கூடாது.

✧ உடைகளில் மாற்றங்கள் செய்யக்கூடாது.

✧ தினசரி வேலைகளில் மாற்றங்கள் கூடாது.

✧ பத்திரங்கள் பதிவு செய்யக்கூடாது.

✧ பத்திரங்களில் கையெழுத்திடக் கூடாது.

✧ புதிய நவீன மருந்துகள் உண்ணக்கூடாது.

✧ புதிய சம்பந்தங்கள் செய்யக்கூடாது.

✧ புதிய ஒப்பந்தங்கள் செய்யக்கூடாது.

✧ கடன்கள் தருவதும், பெறுவதும் கூடாது.

✧ மது போன்ற பழக்கங்கள் பழகிடக்கூடாது.

✧ இரவில் அதிகமாய் விழித்திருக்க கூடாது.

✧ மனதை திட்டங்களுக்காக அலைக்கழிக்க கூடாது.

✧ புதியதாக அரசியலில் ஈடுப்படக்கூடாது.

✧ வாகனங்களை வேகமாக ஓட்டக்கூடாது.

✧ எந்த ஒரு செயலை அவசரமாக பதற்றமாய் செய்யக்கூடாது.

Comments

Popular posts from this blog

எதிரிகளை அழிக்கும் ஆதித்ய ஹிருதயம்

27 நட்சத்திரத்தின் குறிப்புகள்

ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை!...