நீங்கள் பிறந்த தேதியும், ஏற்ற துணையும் !

பொதுவாக ஒரு குழந்தைப் பிறந்தவுடன், பெற்றோர் குழந்தை பிறந்த நேரத்தை வைத்து ஜாதகத்தை கணித்துவிடுவர். அந்தக் குழந்தையின் ஜாதகத்தை வைத்து எதிர்காலத்தைப் பற்றி அறிந்து கொள்வர். அதேபோல் திருமணத்திற்குப் பெண் பார்க்கும்போது ஜாதகத்தை வைத்துதான் பொருத்தம் பார்ப்பது வழக்கம்.

ஜாதகத்திற்கு என்று எப்படித் தனி பொருத்தம் மற்றும் பலன்கள் இருக்கிறதோ, அதேபோன்று, உங்களின் பிறந்த தேதியை வைத்து பொருத்தம் பார்த்து, எந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதைப் பற்றிக் காண்போம்.

1,10,19,28 ம் தேதியில் பிறந்தவர்கள் :

இவர்கள் 3,4,5,6,8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம். இவர்கள் 1ம் எண்ணில் பிறந்த பெண்களை தவிர்ப்பது நல்லது. மேலும் இவர்களுடைய திருமணத் தேதி 1,10,19,28,6,15,24 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளிலும் திருமணம் செய்து கொள்வது நல்லது.

2,11,20,29 ம் தேதியில் பிறந்தவர்கள் :

இவர்கள் 1,3,5,6,7 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் ஏற்றவர்கள். ஆனால், 8 அல்லது 9 எண் உடைய பெண்களை மட்டும் மணக்கவே கூடாது. இவர்கள் தங்களது திருமணங்களை 1,10,19,28,6,15,24,7,16,25 ஆகிய தேதிகளிலும், மற்றும் 1,6,7 ஆகிய எண்கள் கூட்டு எண்களாக வரும் தினங்களிலும் செய்து கொள்வது நல்லது.

3,12,21,30 ம் தேதியில் பிறந்தவர்கள் :

2,3,9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கைப் பயணம், இனிமையாக இருக்கும்.

4,13,22,31 ம் தேதியில் பிறந்தவர்கள் :

1,5,6,8 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். இவர்கள் தங்களுடைய திருமணத்தை 1 அல்லது 6 எண்ணாக வரும் தேதிகளில் வைத்துக் கொள்வது சிறப்பு.

5,14,23 ம் தேதியில் பிறந்தவர்கள் :

இவர்கள் 1,2,3,6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை மணக்கலாம். இவர்கள் திருமணம் செய்வதற்கு 9,18,27,1,10,19,28 ஆகிய தேதிகளும், கூட்டு எண் 1,9 வரும் தேதிகளும் உகந்தவை ஆகும்.

6,15,24 ம் தேதியில் பிறந்தவர்கள் :

இவர்கள் 6,9 எண்களில் பிறந்த பெண்ணை மணந்து கொண்டால், நல்ல திருமண வாழ்க்கை அமையும். 1,4,5,3ம் எண்ணில் பிறந்த பெண்ணை மணக்கக்கூடாது. மேலும் இவர்களின் திருமணத் தேதி, 1,10,19,28,6,15,24,18,27 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 1,6,9 வரும் தேதிகளிலும் செய்து கொள்வது மிகுந்த நன்மையைத் தரும்.

7,16,25 ம் தேதியில் பிறந்தவர்கள் :

இவர்கள் 1,2,5,6 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும். இவர்கள் 8ம் தேதி பிறந்தவர்களை மணக்கக்கூடாது. இவர்கள் திருமணம் செய்து கொள்ளும் நாட்களின் எண்கள் 1,2,6 வருவது சிறந்தது.

8,17,26 ம் தேதியில் பிறந்தவர்கள் :

இவர்கள் 1,4 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களே ஏற்றவர்கள். ஆனால் இவர்கள் 8ம் எண் வரும் பெண்ணை மட்டும் திருமணம் செய்யக்கூடாது. 2,7 ஆகிய கூட்டு எண் வரும் பெண்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. இவர்கள் கூட்டு எண் 1,6 வரும் தேதிகளில் திருமணம் செய்து கொள்வது மிகவும் நல்லது.

9,18,27 ம் தேதியில் பிறந்தவர்கள் :

இவர்களுடைய நட்பு எண்களான 3,5,6,9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்டால், இவர்களுக்கு ஆனந்தமான திருமண வாழ்க்கை அமையும். இவர்கள் கூட்டு எண் 2,8 வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது. இவர்களின் திருமணத்தேதி கூட்டு எண் 3,6,9,1 ஆகியவை வந்தால், குடும்ப வாழ்க்கை நன்றாக அமையும்.

Comments

Popular posts from this blog

எதிரிகளை அழிக்கும் ஆதித்ய ஹிருதயம்

27 நட்சத்திரத்தின் குறிப்புகள்

ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை!...