மாபாவங்களை போக்கும் சுப்பிரமணியனின் நாமம்
முருகா என்ற சொல்லுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் சக்தி உள்ளது. இதற்கு புராண கதையே உள்ளது. வேதம் எல்லாம் போற்றும் கடவுள், முருகப்பெருமான். தமிழ் கடவுள் முருகனை வணங்கினால் எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். அதனால் முருகனை வழிபட ஒருமுறை முருகா என்று சொல்ல பிரம்மஹத்தி தோஷம் போகும் என்பது நம்பிக்கை. அதென்ன பிரம்மஹத்தி தோஷம் என்கிறீர்களா? ஆன்மீகக் கருத்துக்கள் சொல்பவரை தடுத்தல்... தாயிடம் இருந்து குழந்தையைப் பிரித்தல்...கணவன் மனைவியை வாழவிடாமல் தடுத்தல்..பிராமணரை கொன்றல்..பசுவை சித்ரவதை செய்தல்...உயிருள்ள ஜீவராசிகளை அக்னியில் மாய்ப்பது...இதுபோன்ற மாபாவ செயல்களால் பிரம்மஹத்தி என்னும் கொலைப் பாவம் உண்டாகும். பிரம்மஹத்தி தோஷம் இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது என்று கேட்பவர்களுக்கு உங்களின் ஜனன ஜாதகத்தில் ஏதாவது ஒரு கட்டத்தில் குருவும் சனியும் இணைந்திருக்கும் அமைப்பு உள்ளதா என்று பாருங்கள். அதன்பிறகு ஜோதிடரிடம் சென்று பலன் கேளுங்கள். கொலை செய்தாலோ முற்பிறவியில் கடுமையான பாவங்கள் செய்தாலோ இந்த குறை இருக்கும் பிரம்மஹத்தி தோஷத்துடன் பிறக்கவைத்து அதற்கான தண்டனையை அனுபவிக்க நேரிடுகிறது....